மருத்துவ துறையில் கால் பதிக்கும் வுஷு இரட்டையர்கள்... !

 
சேலம்

 

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டையர்களான நிகில் ஸ்ரீராம் மற்றும் நிக்ஷிதா, சர்வதேச வுஷூ போட்டிகளில் பதக்கங்கள் வென்றதன் மூலம் விளையாட்டுப் பிரிவில் மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சிறுவயது முதலே ஒரே வகுப்பறையில் மற்றும் ஒரே பாடப்பிரிவில் படித்து வந்த இவர்கள், விளையாட்டிலும் சிறந்து விளங்கி அசத்தியுள்ளனர். இதன் மூலம் விளையாட்டுத் துறையில் சாதித்ததுடன், மருத்துவத் துறையில் நுழைவதற்கான வாய்ப்பையும் அவர்கள் வெற்றிகரமாகப் பெற்றுள்ளனர்.

குடும்பத்தில் பலர் மருத்துவத் துறையில் ஏற்கனவே பணியாற்றி வருவதால் தாங்களும் இதே துறையைத் தேர்ந்தெடுத்ததாக அந்த இரட்டையர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர். விளையாட்டில் சர்வதேச அளவில் பதக்கங்களை வென்றதுடன் கல்வியிலும் முத்திரபதித்து வந்த இவர்களது விடாமுயற்சி பலரையும் கவர்ந்துள்ளது. பெற்றோரின் முழுமையான ஆதரவும் முறையான பயிற்சியும் இவர்களின் இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பெரிதும் உதவியாக இருந்துள்ளது.

மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்றுள்ள இவர்களின் இந்தச் சாதனைச் செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டில் முத்திரை பதிக்கும் இளைஞர்கள் கல்வியிலும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த இரட்டையர்கள் சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றனர். எதிர்காலத்தில் சிறந்த மருத்துவர்களாக மாறி ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்யப் போவதாக அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.