சேலம் - ஏற்காடு சிறப்பு சுற்றுலா பேருந்து... குறைந்த கட்டணத்தில் மலைப்பயணம்!

 
சேலம் ஏற்காடு பேருந்து சேலம் ஏற்காடு பேருந்து

சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தினமும் காலை 8.30 மணிக்கு ஏற்காடு மலைப்பகுதிக்குச் சிறப்புச் சுற்றுலா பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து ஏற்காட்டில் உள்ள கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், அண்ணா பூங்கா, மான் பூங்கா மற்றும் தாவரவியல் தோட்டம் போன்ற மிக முக்கியமான இடங்களுக்குப் பயணிகளை அழைத்துச் செல்லும். நாள் முழுவதும் ஏற்காட்டின் அழகை ரசித்துவிட்டு, அன்று இரவு 7:00 மணிக்கே மீண்டும் சேலம் வந்து சேரும் வகையில் இந்தச் சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுற்றூலா  கொடைக்கனால் ஊட்டி ஏற்காடு

மலைப் பிரதேசங்களின் அழகைக் கண்டு ரசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தச் சிறப்பு பேருந்து ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதற்கான முழு கட்டணமாக 300 ரூபாயும், சிறியவர்களுக்கான அரை கட்டணமாக 150 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் ஏற்காட்டின் அனைத்து முக்கிய இடங்களையும் குறைந்த செலவில் சுற்றிப் பார்க்க முடிவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே இந்தச் சேவைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

ஏற்காடு

இந்தச் சுற்றுலாப் பயணத்திற்கு முன்பதிவு செய்ய விரும்புவோர் அரசுப் போக்குவரத்துக் கழக முன்பதிவு மையங்களை நேரடியாக அணுகலாம். மேலும், www.tnstc.in என்ற இணையதளம் அல்லது டிஎன்எஸ்டிசி (TNSTC) கைபேசி செயலி மூலமாகவும் மிக எளிதாக முன்பதிவு செய்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் ஏற்காடு செல்லத் திட்டமிடுபவர்கள், இந்தச் சிறப்புப் பேருந்து வசதியைப் பயன்படுத்தித் தங்களது பயணத்தைச் சிறப்பாக்கிக் கொள்ளலாம்.