சலூன் கடையில் தீண்டாமை.. முடி வெட்ட மறுப்பு... 3 பேர் கைது!

 
அருண்பாண்டியன்

பட்டியலினத்தவர்களுக்கு முடி திருத்த மறுத்த கடை உரிமையாளர் உட்பட நாமக்கல் மாவட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் அருகேயுள்ள திருமலைப்பட்டி காமராஜர் காலனியைச் சேர்ந்த அருண்பாண்டியன் (பட்டியிலனத்தவர்) என்பவர் கடந்த 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருமலைப்பட்டியில் உள்ள சீட்டு என்ற சலூனுக்கு தனது இரு மகன்களையும் அழைத்துச் சென்றார்.

ஆனால் சலூன் கடையின் உரிமையாளர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இங்கு முடி திருத்தம் செய்ய முடியாது என்றும், சிகை அலங்காரம் செய்தால் இங்கு கடை நடத்த முடியாது என்றும் உள்ளூர் விதி உள்ளதாக கூறி மறுத்துள்ளார். மேலும், 18 பட்டி மக்கள் சொன்னதை மீற முடியாது என்றும், யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள், பஞ்சாயத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அருண்பாண்டியன், சலூன் கடை உரிமையாளரிடம் முடி வெட்டும்படி வற்புறுத்தியும், கடைசி வரை அருண்பாண்டியனின் குழந்தைகளுக்கு முடி வெட்டவில்லை.

இந்நிலையில், அருண்பாண்டியனும், அவரது மகனும் சலூன் கடைக்காரரிடம் முடி வெட்டும்படி வற்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து  அருண்பாண்டியன் தீண்டாமைக் கொடுமை குறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அருண்பாண்டியன் அளித்த புகாரின் பேரில், ஊர் கட்டுப்பாடு விதித்த கடை உரிமையாளரான செல்வராசு, ராஜேஷ்குமார் ஆகிய இருவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web