சல்யூட்... 300 கி.மீ. தூரம்.. 40 சவரன் நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த திருச்சி ரயில்வே போலீசார்!

 
ஸ்ரீதேவி

திருநெல்வேலி டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த குமாரின் மனைவி ஸ்ரீதேவி. இவர் சென்னை தாம்பரத்தில் இருந்து நேற்று தனது மகன் அஜய்குமாருடன் செங்கோட்டை ர்க்ஸ்பிரஸ் ரயிலில், எம்.5 கோச்சில் செங்கோட்டைக்கு பயணத்துள்ளார். 

ஸ்ரீதேவியின் கணவர் குமார், துபாயில் வேலைப் பார்க்கிறார். துபாயில் வேலைப் பார்க்கும் தனது கணவரைப் போய் பார்த்து விட்டு, திரும்பி வரும் போது, அங்கிருந்து 40 சவரன் நகைகளை வாங்கிக் கொண்டு ரயிலில் எடுத்துக் கொண்டு செங்கோட்டைக்கு சென்றுள்ளார். வழக்கம் போல் அதிகாலையில் ரயில் செங்கோட்டைக்குப் போய் சேர்ந்தவுடன், கீழே இறங்குவதற்காக தன்னுடைய பெட்டியைத் தேடியிருக்கிறார். அப்போது தனது பெட்டி காணாமல் போனது தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.  அந்த பெட்டியில் தான் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 40 சவரன் நகைகலையும் வைத்திருந்துள்ளார். அதே கோச்சில், இவரது பெட்டியைப் போலவே வேறொரு பெட்டி இருந்துள்ளது. பின்னர், இது குறித்து திருநெல்வேலி இருப்புப்பாதை காவல்துறையினரிடம் தெரிவித்தார். 

ஸ்ரீதேவி நகைகள்

கேட்பாரற்று அதே கோச்சில் இருந்த மற்றொரு பெட்டியைப் பார்த்த ரயில்வே போலீசார் விஷயத்தை ஓரளவு யூகித்தனர். விசாரணையில், நான் ரயிலில் ஏறிய கொஞ்ச நேரத்தில் என்னுடைய பெட்டியைப் போன்றே ஒரு கருப்பு பெட்டியை எடுத்துக் கொண்டு ஒரு பெண் ஏறினார். அந்த பெட்டி தான் இது. என்னுடைய நகைகளுடன் கூடிய பெட்டியை அவர் எடுத்துச் சென்று விட்டார் என்று அழுதப்படியே புலம்பிக் கொண்டிருந்தார். 

அவரை சமாதானப்படுத்திய திருநெல்வேலி இருப்புப்பாதை காவல்துறையினர், நகைகளை பத்திரமாக மீட்டு தருகிறோம் என்று ஆறுதல் சொல்லி களத்தில் இறங்கினார்கள்.  உடனடியாக, திருச்சி இருப்புப்பாதை காவல்துறை டி.எஸ்.பி. பிரபாகரனுக்கு தகவல் சொன்னார்கள். அவர் ரயில்வே முன்பதிவுக்காக கொடுக்கப்பட்ட விபரங்களில் இருந்து அந்த பெண்ணின் பெயர் லுப்னா நஸ்ரீத் என்பதையும், அவர் பட்டுக்கோட்டையில் இறங்கி விட்டதையும் தெரிந்து கொண்டு, உடனடியாக திருவாரூர் இருப்புப் பாதை காவல்துறைக்கு டி.எஸ்.பி பிரபாகர் தகவல் தந்தார். 

ஸ்ரீதேவி

பட்டுக்கோட்டையில் பயணி லுப்னா நஸ்ரீத் வீட்டைக் கண்டுபிடித்து விசாரித்த போது, நள்ளிரவில் ரயிலை விட்டு இறங்கியவர், வீட்டில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.  அவரிடம் போலீசார் விஷயத்தைச் சொல்லி, அந்தப் பெட்டியை வாங்கிக் கொண்டு, மாலையில் பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து உங்களுடைய பெட்டியை வாங்கிக் கொள்ளுங்கள் என கூறி விட்டு, நகைகளைத் தவற விட்ட ஸ்ரீதேவியையும் பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு மாலையில் வரவழைத்தனர். பின்னர், இருவரையும் நேருக்கு நேர் சந்திக்க வைத்து, நகைகளை சரிபார்க்கச் சொல்லி ஸ்ரீதேவியிடம் ஒப்படைத்தனர். இருவரது பெட்டிகளையும் அவர்கள் கையில் ஒப்படைத்தனர். 

இருவரும் உடமைகளை சரி பார்த்து இருப்புப்பாதை காவல்துறை போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி சொன்னார்கள். நகைகளை மீண்டும் பார்த்த ஸ்ரீதேவி, ஆனந்தக் கண்ணீரில் போலீசாருக்கு நன்றி கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

From around the web