திருமண பந்தத்தில் இணைந்த பாடகர்கள்… சாம் விஷால் – ஸ்ரீநிஷா!
ஒரே மேடையில் பாடியவர்கள்… இப்போது வாழ்க்கையிலும் ஜோடி! சாம் விஷால் – ஸ்ரீநிஷா நிச்சயதார்த்தம்
விஜய் தொலைக்காட்சியின் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான பின்னணிப் பாடகர்கள் சாம் விஷால் மற்றும் ஸ்ரீநிஷா ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
கடந்த நவம்பர் 11-ம் தேதி நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த நிகழ்வில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களைத் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
ஸ்ரீநிஷா, ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர். பின்னர் இளையராஜா இசையமைத்த ‘அம்மா கணக்கு’ திரைப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். ‘அடி பெண்ணே’, ‘கண்ண வீசி’, ‘ஜுல்லு ஜக்கம்மா’ உள்ளிட்ட பாடல்கள் மூலம் கவனம் பெற்றார்.
சாம் விஷால், ‘சூப்பர் சிங்கர் சீசன் 7’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர். ‘மாஸ்டர்’ படத்தின் தெலுங்குப் பாடலான ‘சிட்டி ஸ்டோரி’ மற்றும் ‘அன்பறிவு’ படத்தின் ‘கனவுகள்’ பாடல் உள்ளிட்டவற்றைப் பாடியுள்ளார். பாடல்களை எழுதுவதிலும் இசையமைப்பதிலும் ஈடுபட்டு வருகிறார்.
இருவரும் இணைந்து இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வந்த நிலையில், தற்போது திருமண வாழ்க்கையில் இணைய உள்ளனர். இந்த ஜோடிக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
