தொகுதி மறுவரையறைக்கு சமாஜ்வாதி கட்சி கடும் எதிர்ப்பு... எம்.பி.க்களுக்கு 3 வரி கொறடா உத்தரவு!

 
அகிலேஷ் யாதவ்

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை "பாஜகவின் மிகப்பெரிய அரசியல் தவறு" எனக் கடுமையாக விமர்சித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கத் தனது கட்சி எம்.பி.க்களுக்கு 3 வரிகள் கொண்ட கொறடா உத்தரவை பிறப்பித்துள்ளார். மறுபுறம், மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தில் 50 சதவீத உயர்வை வழங்க வழிவகுக்கும் இந்த மசோதாவை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு கொரோனா தொற்று உறுதி

நாளை நவம்பர் 30ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் கொண்டு வரப்பட உள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மசோதாவைத் தீவிரமாக எதிர்த்துள்ளார். இது பாஜகவின் மிகப்பெரிய அரசியல் தவறு எனச் சாடியுள்ள அவர், தேர்தல்களை மட்டுமே மையமாகக் கொண்டு மத்திய அரசு செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது, அதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனத் தனது கட்சி மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு அகிலேஷ் யாதவ் 3 வரிகள் கொண்ட கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் ராகுல் குலாம் நபி

மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தில் சீரான 50 சதவீத உயர்வை வழங்க வழிவகுக்கும் இந்தத் தொகுதி மறுவரையறை மசோதாவை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றச் சிறப்பு அமர்வு நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை நடைபெற உள்ள நிலையில், மசோதா மீதான விவாதமும் வாக்கெடுப்பும் தேசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.