வைரல் வீடியோ!! சமந்தா தன்னை விட வயது குறைவான நடிகருடன் மேடையில் குத்தாட்டம்!!

 
குஷி

விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குஷி. இந்த திரைப்படத்தின்  இசை நிகழ்ச்சி ஹைதராபாத்தில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களுக்கு  விஜய் தேவரகொண்டா - சமந்தா இருவரும்  இணைந்து ஆடிய நடனம் ரசிகர்களை குஷிப்படுத்தியது.  இருவரும் மேடையில் ஆடிய நடனம்   சிறப்பான கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.  இந்த நடனத்தின் ஒரு பகுதியில்   விஜய் தேவரகொண்டா சமந்தாவை அலேக்காக தூக்கி பிடித்து சுற்றினார்.


 

அரங்கத்தின் அத்தனை பேரும் உற்சாகத்தில் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.  இந்த நடனத்திற்காக  சமந்தா பாரம்பரிய லுக் லெகன்ன்காவும், விஜய் தேவரகொண்டா, கை பனியன் பெரிய பேண்டும் அணிந்திருந்தனர்.   சிவா நிர்வாணா இயக்கியுள்ள இப்படத்தில் சமந்தா - விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்துள்ளனர். இது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது திரைப்படமாகும்.

குஷி

சமந்தா தன்னை விட 2 வயது குறைவான நடிகருடன் பொது மேடையில் மிக நெருக்கமாக ஆடியதாக  ரசிகர்கள் கூறியுள்ளனர்.  இதற்குமுன் மகாநட்டி திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படம்  செப்டம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று இப்படத்தின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  சமந்தாவை அலேக்காக தூக்கி சுற்றினார் விஜய் தேவரகொண்டா. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web