நீட் போராட்டத்தில் சலசலப்பு - மேடையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட சனம் ஷெட்டி!
சென்னை தி.நகரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடத்திய நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற நடிகை சனம் ஷெட்டி, 'ஜனநாயகன்' திரைப்படம் குறித்துப் பேசியதால் ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து மேடையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகை சனம் ஷெட்டி, மாணவர்களின் போராட்ட மேடையில் திடீரெனத் திரைப்படம் மற்றும் அரசியல் கருத்துகளைப் பேசத் தொடங்கியுள்ளார். மாணவர்கள் தங்கள் உரிமைகளுக்காக நடத்தும் போராட்ட மேடையை, சிலர் தங்களின் சுய அரசியல் அஜண்டாவிற்காகப் பயன்படுத்துவதை எவராலும் ஏற்க முடியாது என அவர் தன் ஆதங்கத்தைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஜனநாயகன் படம் பார்த்த நாங்கள் ஒன்றும் ஜோக்கர் இல்லை, நீங்கள்தான் ஜோக்கர்" என்று மேடையில் பகிரங்கமாகக் குறிப்பிட்டார். சனம் ஷெட்டியின் இந்தப் பேச்சைக் கேட்டுப் போராட்டக் களத்தில் இருந்த மாணவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கடும் கொந்தளிப்படைந்தனர்:
நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை வேறு திசைக்குக் கொண்டு செல்லும் வகையில் பேசியதாகக் கூறி, அங்கிருந்த மாணவர்கள் உடனடியாக அவருக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பைத் தொடர்ந்து, அவரிடமிருந்த ஒலிபெருக்கி (மைக்) உடனடியாகப் பிடுங்கப்பட்டு, அவர் மேடையை விட்டு வெளியேற்றப்பட்டார்.
