சனாதன ஒழிப்பு மாநாடு... உதயநிதிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

 
மாற்றுத்திறனாளிகள் விவகாரத்தில்  உச்சநீதிமன்றம் புதிய வழிக்காட்டுதல்..!! மாற்றுத்திறனாளிகள் விவகாரத்தில்  உச்சநீதிமன்றம் புதிய வழிக்காட்டுதல்..!!

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ஆ.ராசா மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மற்றும் வெறுப்புப் பேச்சு வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கடந்த 2023-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "சனாதனத்தை டெங்கு, கொசுவைப் போல ஒழிக்க வேண்டும்" என்று பேசியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாகத் தொடரப்பட்ட மனுவில், உதயநிதி, ஆ.ராசா, கமல்ஹாசன் உள்ளிட்டோர் மீது வெறுப்புப் பேச்சு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிய வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

உதயநிதி

நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா அடங்கிய அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பில், ஒரு செயலைத் 'தவறு' என வரையறுப்பதும், அதற்குச் சட்டங்களை இயற்றுவதும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தின் வரம்பிற்கு உட்பட்டது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது.

"சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்களுக்கு நீதிமன்றங்கள் விளக்கம் அளிக்கலாமே தவிர, புதிய சட்டங்களை இயற்றும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது" என நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க ஏற்கனவே போதுமான சட்டங்கள் உள்ளன. சமூக மாற்றத்திற்கு ஏற்ப கூடுதல் சட்டப்பிரிவுகள் தேவைப்பட்டால், அதை மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும்.

உதயநிதி

தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் (மே 4), உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. சனாதன விவகாரத்தை முன்வைத்து பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வந்த விமர்சனங்களுக்கு இத்தீர்ப்பு ஒரு முற்றுப்புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.