மாட்டு வண்டியில் மணல் கொள்ளை.. தலைமறைவான குற்றவாளிகளை தீவிரமாக தேடும் போலீசார்..!
ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் கடத்திய 7 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யபட்டு மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து நடவடிக்கை . மேலும் தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பாலாற்றில் இரவு நேரங்களில் தொடர்ந்து மாட்டுவண்டிகள் மூலம் மணல் கடத்துவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பட் ஜான்க்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கிடைத்த தகவலின் பேரில் எஸ். பி தலைமையிலான தனிப்படை போலீசார் ஆம்பூர் அடுத்த கமகிருஷ்ணம்பள்ளி மற்றும் பெரியாங்குப்பம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக பாலாற்றில் கள்ளத்தனமாக மணல் கடத்தி வந்த 7 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து மணல் கடத்தலில் ஈடுபட்ட பெரிய வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த வரதராஜ், கம்மகிருஷ்ணம்பள்ளி பகுதியை சேர்ந்த பிரகாசம், ராமச்சந்திராபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து உமராபாத் காவல்துறை மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மணல் கடத்தலில் ஈடுபட்ட மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்