வெள்ளி கடற்கரையில் மணல் சிற்பம்... 100% வாக்குப்பதிவு!

 
மணல் சிற்பம்

இந்தியாவில் ஏப்ரல் 19 ம் தேதி முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கடலூர் மாவட்டம் வெள்ளி கடற்கரையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மணல் சிற்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார்.

தேர்தல்
தமிழகம் உட்பட நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்  ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி கடலூர் வெள்ளி கடற்கரையில் 100% வாக்களிக்க வலியுறுத்தி மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த மணல் சிற்பத்தை  கலெக்டரும் ,  தேர்தல் அதிகாரியுமான அருண் தம்பராஜ் பார்வையிட்டுள்ளார்.  

தேவர்குளம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்

அப்போது வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதி மொழியை கல்லூரி மாணவர்கள்  ஏற்றனர். அவர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.  அத்துடன்  வெள்ளி கடற்கரையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி மாவட்ட  தேர்தல் அதிகாரி அருண் தம்புராஜ் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இது குறித்த  புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web