சத்தமே இல்லாமல் நடந்த மணல் கொள்ளை.. கையும் களவுமாக சிறைபிடித்த பொதுமக்கள்!

 
மணல் கொள்ளை

ஆம்பூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய ஜேசிபி மற்றும் டிப்பர் லாரி, மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடச்சேரி அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அனுமதி இன்றி ஜேசிபி மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் . அப்போது அங்கு இருக்கக்கூடிய பொதுமக்கள் வாகனங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உமராபாத் காவல் துறையினர் மணல் கடத்திக்கொண்டிருந்த  டிப்பர் லாரி, மினி லாரி மற்றும் ஒரு ஜேசிபி எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட மாராப்பட்டு பகுதியை சேர்ந்த கார்த்தி, மின்னூர் பகுதியை சேர்ந்த வல்லரசு, வடகரை பகுதி சேர்ந்த ஞானவேல் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

பின்னர், உமராபாத் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு துணையாக இருந்தவர்கள் மற்றும் நிலத்தின் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web