ஆட்டோ மீது மணல் லாரி மோதி கோர விபத்து.. 2பேர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!

 
குண்டுசாலை விபத்து

கடலூர் குண்டு சாலையில் இன்று காலை ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடலூர் அருகே காராமணிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ரவி (53). இவரது மனைவி சரஸ்வதி (35) கணவன், மனைவி புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக இன்று காலை 7 மணியளவில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

கடலூர் வில்வநகர் பகுதியை சேர்ந்த சண்முகம் (65) ஆட்டோ ஓட்டி வந்தார். கடலூர் குண்டுசாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, புதுச்சேரி சாலையில் இருந்து எம் சாண்ட் ஏற்றிச் சென்ற லாரி, அதிவேகமாக வந்த ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய ஆட்டோ டிரைவர் மற்றும் ரவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சரஸ்வதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சண்முகம், ரவி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து காரணமாக குண்டுசாலை பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web