கொடூரத்தின் உச்சம்!! பள்ளி மாணவனுக்கு செருப்பு மாலை அணிவித்த ஆசிரியை!!

 
மாணவன்

ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு  போய் 75ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் ஆங்கிலேய மோகமும், அதன் பழக்க வழக்கங்களும் நம்மை நாளும் பின் தொடர்கின்றன. தாய்மொழி கல்வி என்பதே காணாமல் போய் ஆங்கில வழிக்கல்வி மேற்கத்திய கலாச்சாரம், உணவு, உடை என மக்கள் சீரழிந்து வருகின்றன. எதில போய் முடியுமோ என்ற சமூக ஆர்வலர்களின் புலம்பல்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசுவதும், நவநாகரிகம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவும் தான் இன்றைய இளம் தலைமுறையை வழிநடத்தி கொண்டிருக்கிறது.  அதன் விளைவுகளில் ஒன்றாக பள்ளியில் படிக்கும் வயதில் தாய்மொழியை விட ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதே அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.  

வகுப்பறை


மேகாலயா  6ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுக்கு ஆசிரியை செருப்பு மாலை அணிவித்து அவமானப்படுத்தியுள்ளார்.   பழைய செருப்புக்களை   மாலையாக அணிவித்து பள்ளி வளாகத்தினுள் வலம் வரச் செய்திருக்கிறார்கள். இது குறித்து பள்ளிச் சிறுவன், அழுகையினூடே பெற்றோரிடம் முறையிட, அவர்கள் காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  
அப்போதுதான் நீண்ட காலமாக அப்பள்ளியில் ஆங்கிலம் பேசாத மாணவர்களுக்கு காலணி மாலை அணிவிப்பது வழக்கில் இருந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இது குறித்து  பெற்றோர் எவரும் அது குறித்து எதிர்ப்பு தெரிவிக்காததும் வெளிப்பட்டிருக்கிறது.

ச்

தங்கள் பிள்ளை ஆங்கிலத்தில் பேசினால் போதும் என்ற மனோபாவம் பெற்றோர்களிடையே அதிகரித்து வருகிறது.    தூக்கி எறியப்பட்டசெருப்புக்களை சேகரித்து மாலையாக அணிவிப்பது, குப்பைத் தொட்டியை நாவால் நக்கச் சொல்வது, முடியை அலங்கோலமாக நறுக்கிவிடுவது இவை தினசரி தண்டனைகளாக   அந்த பள்ளியில் அரங்கேற்றி வந்துள்ளனர்.  
பள்ளி வளாகத்தில் ஆங்கிலத்தில் பேசாத மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, பள்ளி பிரேயர் நிகழ்வின் போது தலைமையாசிரியரால் தண்டனைக்குரிய மாணவரின் பெயர் அறிவிக்கப்படும்.   அந்த மாணவ, மாணவிகளின் மீது செருப்பு மாலை போடுவது போன்ற  அக்கிரமங்கள் அரங்கேறும்.  இச்சம்பவம்  குறித்து  வழக்கு பதிவு செய்யப்பட்டு கல்வித்துறை சார்பிலும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web