“விஜய்க்கு மனநல பாதிப்பு உள்ளது” - விவாகரத்து மனுவில் சங்கீதாவின் பகீர் குற்றச்சாட்டுகள்!
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு, சங்கீதா தாக்கல் செய்துள்ள கூடுதல் புகார்களால் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விஜய்யின் மனநலம் குறித்து அவர் எழுப்பியுள்ள கேள்வி முக்கிய விவாதமாக மாறியுள்ளது. திருமணமாகி 27 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து கோரியுள்ள சங்கீதா, தனது மனுவில் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நடத்தை குறித்துப் பல்வேறு திடுக்கிடும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்:

விஜய்க்கு மனநல கோளாறு இருப்பதாகவும், அவர் ஒரு மனநிலை சரியில்லாதவர் என்றும் சங்கீதா தனது மனுவில் நேரடியாகக் குறிப்பிட்டுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021-ஆம் ஆண்டு முதல் ஒரு பிரபல நடிகையுடன் விஜய் உறவில் இருப்பதாகவும், அந்த நடிகையை வீட்டிற்கே அழைத்து வந்து, சங்கீதாவைப் புறக்கணித்து விட்டு அவருடன் வாழ்ந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த நடிகை எனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பகிரங்கமாக வெளியிட்டபோது, விஜய் அதைத் தடுக்காமல் மௌனமாக இருந்தார் என்றும், இது தனக்குப் பொதுவெளியில் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார். ஒரே வீட்டில் வசித்தாலும் 2021 முதல் இருவரும் பிரிந்தே வாழ்வதாகவும், தனது குழந்தைகளின் படிப்பு மற்றும் எதிர்காலத்திற்காகவே இதுவரை அமைதி காத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தனக்கு ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்பட்டால், அந்த நடிகையை ஆதாரங்களுடன் இந்த வழக்கில் குற்றவாளியாக (Co-respondent) சேர்ப்பேன் என்றும் சங்கீதா எச்சரித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற கட்சியைத் தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ள விஜய்க்கு, குடும்ப ரீதியான இந்தப் புகார்கள் மற்றும் அவரது மனநலம் குறித்த விமர்சனங்கள் அரசியல் ரீதியாகவும் பெரும் சவாலாகக் கருதப்படுகிறது.
