தூய்மைப் பணியாளர்களின் 16 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

 
தூய்மை பணியாளர்கள் துப்புரவு போராட்டம்

மகப்பேறு மற்றும் மாதவிடாய் விடுப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தித் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டு வந்த தொடர் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக வரும் அக்டோபர் 3-ம் தேதியன்று அரசின் தரப்பில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

போராட்டம் கைது தூய்மைப் பணியாளர்கள் தூய்மை

இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த 16 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக உழைப்போர் உரிமை இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பாரதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.