சம்பள உயர்வு கோரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
Aug 9, 2026, 07:30 IST
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டல அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் திரண்டு தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தங்களுக்கு தற்போது ஒரு நாளைக்கு ரூ. 350 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுவதாகவும், அதனை ரூ. 500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தூய்மைப் பணியாளர்கள் வலியுறுத்தினர். எந்தவித தடையுமின்றி தங்களுக்கு முறையான வார விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
மண்டல அலுவலக வளாகத்தில் பணியாளர்கள் திரண்டு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தியதால், அங்குச் சிறிது நேரம் பணி பாதிப்பும் பரபரப்பான சூழலும் நிலவியது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளைக் பரிசீலிப்பதாகத் தெரிவித்தனர்.
