கரூரில் 4-வது நாளாக நீடிக்கும் தூய்மைப் பணியாளர்களின் காத்திருப்புப் போராட்டம் - வாகன ஓட்டுநர்கள் ஆதரவு!
கரூரில் பணிச்சுமையைக் குறைத்தல் மற்றும் போனஸ் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடத்தி வரும் காத்திருப்புப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்து வருகிறது.
பணிச்சுமையைச் சீரமைக்க வேண்டும், முறையான போனஸ் வழங்க வேண்டும் மற்றும் இதர பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு முழு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மாநகராட்சியின் 120 தூய்மைப் பணி வாகன ஓட்டுநர்களும் இக்காவிரிப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
தங்களது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும் வரை போராட்டம் கைவிடப்படாது என்றும், தொடர்ந்து நடைபெறும் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
