குடும்பத்துல ஒருத்தர், ரொம்ப கஷ்டமா இருக்கு... நடிகர் சேஷு மறைவால் நொறுங்கிப் போன நடிகர் சந்தானம்!

 
சந்தானம்
 

 சென்னையில் நகைச்சுவை நடிகர் சேஷுவின்  உடல் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருடைய உயிர் நண்பர்  நடிகர் சந்தானம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.அவரது மறைவு குறித்து நடிகர்  சந்தானம் ” எங்களுடைய லொள்ளு சபா குடும்பத்தில்  ஒருத்தர் சேஷு. அவருடைய மறைவு செய்து இப்படி வரும் என நான் நினைத்து கூட பார்க்கவில்லை. ரொம்ப வருத்தமாக இருக்கிறது.
அவர் மறைவு செய்தியை கேட்டு இவ்வளவு பேர் வந்து இருக்கிறோம். அவர் நல்ல நடிகர் என்பதையும் தாண்டி என்னை பொறுத்தவரை அவர் நல்ல மனிதர். படத்தின் பேச்சுவார்தைகாக நாங்கள் வெளியே சென்று இருந்தோம் அந்த சமயத்தில் இப்படி ஒரு தூயரமான செய்தி எங்களுடைய காதில் வந்தது வேதனை அளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” எனவும் நடிகர் சந்தானம் உருக்கமாக கூறியுள்ளார்.  

உடல்நலக்குறைவு காரணமாக நேற்று பிரபல நகைச்சுவை  நடிகர் சேஷூ தனது 60வது வயதில் காலமானார். அவருடைய இறுதி அஞ்சலி இன்று காலை   சென்னையில் நடைபெற்றது.   மாரடைப்பு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை காவேரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர்கள் சந்தானம், ஜீவா, மனோகர், சேஷூ என 'லொள்ளு சபா’  நிகழ்ச்சியில் வலம் வந்த நடிகர்கள் ரசிகர்களிடையே நன்கு பரிட்சயமானார்கள். 

சேஷு
இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் சேஷு திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது நண்பரும் நடிகருமான உதயா முகநூல் பக்கத்தில், நடிகர் சேஷூவின் சிகிச்சைக்கு உதவி கோரியும் பதிவிட்டிருந்தார். 25க்கும் அதிகமான திரைப்படங்களில் சந்தானம், யோகிபாபு ஆகியோருடன் சேர்ந்து நடித்திருக்கிறார் சேஷூ.

rip

சமீபத்தில் இவர் சந்தானத்துடன் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இணைந்து நடித்திருந்தார். கொரோனா சமயத்தில் ஓடிப்போய் பலருக்கும் உதவியது, பல ஏழைப் பெண்களுக்கு திருமணம் நடத்தி வைத்தது என உதவும் கொண்டவராகவும் இருந்தவர் சேசு.‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இவரது கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. திரையுலகைச் சேர்ந்த பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web