5 லட்சம் மதிப்புள்ள புடவைகள் அபேஸ்.. சிசிடிவி மூலம் கையும் களவுமாக சிக்கிய ஆந்திர பெண்கள்.!!

 
ஆந்திர பெண்கள்

5 லட்சம் மதிப்புள்ள பட்டுப் புடவைகளை திருடி சென்ற ஆந்திர பெண்களை சிசிடிவி காட்சி மூலம் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள துகில் பொட்டிக் கடையில் கடந்த 3 ஆம் தேதியன்று 6 பெண்கள் பட்டுப்புடவை எடுக்க வந்துள்ளனர். அவர்கள் சென்ற பின்னர் கடை ஊழியர்கள் புடவையை சோதனை செய்து பார்த்தபோது விலை உயர்ந்த 10 பட்டுப் புடவைகள் காணாமல் போனது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் வந்திருந்த ஆறு பெண்களும் ஊழியர்கள் கவனக்குறைவாக இருந்த நேரத்தில் பட்டுப்புடவைகளை ஆடைக்குள் மறைத்து எடுத்து செல்வது தெரியவந்தது. 


இதையடுத்து, சென்னை சாஸ்திரி நகர் காவல்நிலையத்தினர் மாநிலங்களுக்கு இடையே இயங்கும் காவல்துறை வாட்ஸ் அப் குழுவில் சிசிடிவி காட்சிகளை பதிவிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதில், அவர்கள் 6 பேரும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

சிசிடிவி காட்சி

இதனையடுத்து விஜயவாடா போலீசார் 6 பெண்களை கண்டறிந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது, அந்த பெண்கள் தெரியாமல் செய்து விட்டதாகவும், தாங்கள் கடைக்கு மீண்டும் புடவைகளை அனுப்பி வைப்பதாகவும் கூறிவிட்டு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பத்து பட்டுப்புடவைகளை கொரியர் மூலமாக சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் ஜவுளிக்கடை உரிமையாளர் காவல் நிலையம் வந்து பட்டுப் புடவைகளை பெற்றுக் கொண்டார்.

From around the web