சாத்தான்குளம் அருகே தாய் கொலை வழக்கு: தந்தையும் உயிரிழப்பு
Oct 23, 2026, 15:00 IST
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, 15 வயது சிறுமியைக் காதலித்த விவகாரத்தில் ஞானப்பிரகாஷ் (26) என்பவர் சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து அவரது தாய் மேரி ரெஜிலாவை வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சிறுமியின் தந்தை முத்துகிருஷ்ணன் மற்றும் சகோதரரையும் அரிவாளால் தாக்கிவிட்டு, இரண்டு சிறுமிகளை அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஞானப்பிரகாஷை போலீசார் கைது செய்தனர். படுகாயமடைந்த முத்துகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த சிறுமியின் சகோதரருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
