விரைந்து குணமடையும் சத்குரு.... இசையுடன் வீடியோ வெளியிட்ட ஈஷா!
கடந்த சில நாட்களுக்கு முன் சத்குரு ஜக்கி வாசுதேவ் மூளைப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். தற்போது விரைவாக குணமடைந்து வருவதாகவும் அவர் செய்தித்தாள் படிப்பது போன்ற புகைப்படங்களும், வீடியோகக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு கடந்த சில மாதங்களாக ஒற்றை தலைவலி தொடர்ந்து இருந்து வந்தது.
#Sadhguru #SpeedyRecovery pic.twitter.com/rTiyhYPiJM
— Sadhguru (@SadhguruJV) March 25, 2024
திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைபாட்டால் டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, அவரது மூளையில், ரத்தகசிவு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஜக்கி வாசுதேவ் நலமுடன் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஷா அறக்கட்டளை சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது குறித்த வீடியோவை ஈஷா மையம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், சத்குரு ஜக்கி வாசுதேவின் சமூக வலைதள பக்கத்தில் மற்றொரு வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் சத்குரு ஜக்கி வாசுதேவ், செய்தித்தாள் படிக்கிறார். இந்த வீடியோவை பதிவிட்டு சத்குரு நன்றாக குணமடைந்து வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை. சத்குருவின் உடல்நிலையில், முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது" என பதிவிடப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!