சனி பெயர்ச்சி (வக்ர நிவர்த்தி) பலன்கள்: எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு - 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள்!

 
சனி பகவான்

மீன ராசியில் சஞ்சரித்து வரும் சனி பகவான், ஜூலை 27-ம் தேதி முதல் வக்ர கதியில் (பின்னோக்கி) பயணித்து வந்த நிலையில், வரும் டிசம்பர் 11, 2026 அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தனது வக்ர பயணத்தை முடித்துக் கொண்டு வக்ர நிவர்த்தி (நேர்கதி) அடைகிறார். சனி பகவானின் இந்த நேர்கதிப் பயணத்தால், கடந்த சில மாதங்களாகத் தடைபட்டு நின்ற பல காரியங்கள் வேகமெடுக்கத் தொடங்கும். 12 ராசிகளுக்கும் இந்த மாற்றம் எத்தகைய பலன்களைத் தரும் என்பதை இங்கே பார்க்கலாம்:

அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் பெறும் ராசிகள்:

ரிஷபம் (11-ம் இடம் - லாப சனி): சனியின் நேர்கதிப் பயணம் உங்களுக்குப் பொற்காலமாக அமையும். நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பதவி உயர்வு மற்றும் சொத்து சேர்க்கைக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

மிதுனம் (10-ம் இடம் - கர்ம சனி): தொழில் ஸ்தானத்தில் சனி வலுப்பெறுவதால், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். சிறிய முயற்சிகளுக்கும் பெரிய வெற்றி கிடைக்கும். தந்தையின் ஆதரவும், ஆலோசனையும் கடினமான சூழல்களைக் கடக்க உதவும்.

கடகம் (9-ம் இடம் - பாக்கிய சனி): இதுவரை தடைபட்ட சுப காரியங்கள் இனி தடையின்றி நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீடு, வாகன யோகம் உண்டாகும்; உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சனி பகவான்

துலாம் (6-ம் இடம் - ரோக சனி): எதிரிகள் தொல்லை நீங்கி, பொருளாதார நிலை கணிசமாக உயரும். வேலை மாற்றத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். தொழிலதிபர்களுக்கு லாபகரமான காலமாக அமையும்.

விருச்சிகம் (5-ம் இடம் - பூர்வ புண்ணிய சனி): வருமானம் அதிகரித்து சேமிப்பு உயரும். சகோதரர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

மகரம் (3-ம் இடம் - முயற்சி ஸ்தானம்): ஏழரை சனியின் தாக்கம் விலகிய நிலையில், சனியின் நேர்கதிப் பயணம் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சமுதாயத்தில் செல்வாக்கு உயரும்; வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் கைகூடும்.

கவனமும் நிதானமும் தேவைப்படும் ராசிகள்:

மேஷம் (12-ம் இடம் - விரைய சனி): ஏழரை சனியின் முதல் கட்டம் நடப்பதால், தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். புதிய முதலீடுகளில் இறங்கும் முன் தீர ஆலோசித்து முடிவெடுக்கவும்.

சிம்மம் (8-ம் இடம் - அஷ்டம சனி): எந்தவொரு செயலிலும் நிதானம் தேவை. வாகனப் பயணங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும், பூர்வீக சொத்து விவகாரங்களில் பொறுமை காப்பதும் நன்மை தரும்.

கன்னி (7-ம் இடம் - கண்ட சனி): வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைந்தாலும், நிதி கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது சிக்கல்களைத் தவிர்க்கும்.

சனி சனிப்பெயர்ச்சி ராசி

தனுசு (4-ம் இடம் - அர்த்தாஷ்டம சனி): பணிச்சுமை சற்று அதிகரிக்கக்கூடும். தாயாரின் உடல்நலனில் அக்கறை காட்டவும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வது தொழிலில் பாதிப்பு ஏற்படாமல் காக்கும்.

கும்பம் (2-ம் இடம் - பாத சனி): ஏழரை சனியின் இறுதிக்கட்டம் என்பதால் பேச்சில் நிதானம் மிக அவசியம். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் அமைதியைப் பாதுகாக்கலாம்.

மீனம் (1-ம் இடம் - ஜென்ம சனி): சனி உங்கள் ராசியிலேயே வக்ர நிவர்த்தி அடைவதால், உடல் ஆரோக்கியத்திலும் மன அழுத்தத்திலும் கவனம் செலுத்த வேண்டும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் சற்று தாமதமாகக் கிடைத்தாலும், இறுதியில் வெற்றி நிச்சயம்.