சௌகார் ஜானகி 4 முதலமைச்சர்களுடன் பணியாற்றியவர்!

 
சௌகார்

 

திரைத்துறையில் நீண்டகாலம் முத்திரைப் பதித்த மூத்த நடிகை சௌகார் ஜானகி (94) வயது முதிர்வு காரணமாக இன்று (ஆகஸ்ட் 21) காலமானார். தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள இவர், இந்திய சினிமாவின் பொற்காலப் படங்களில் முக்கியமான முகமாகத் திகழ்ந்தவர்.

சௌகார் ஜானகி

திரைவாழ்வில் பல ஜாம்பவான்களுடன் இணைந்து நடித்துள்ள பெருமை இவருக்கு உண்டு. குறிப்பாக, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர்., ஜெ. ஜெயலலிதா மற்றும் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் என்.டி. ராமாராவ் ஆகியோருடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர்   மேலும், முத்தமிழறிஞர் கருணாநிதி எழுதிய அர்க்கைமிக்க வசனங்களைப் பேசி நடித்த பெருமையும் சௌகார் ஜானகிக்குச் சொந்தமானது. இவரது மறைவு தமிழ்த் திரைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.