உலக அழகி போட்டி வரலாற்றில் முதன் முறையாக சௌதி அரேபியா... வைரலாகும் இன்ஸ்டா!

 
அல்கஹ்தானி

 சவுதி அரேபியா மற்றும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் அழகிப்போட்டி வரலாற்றில் முதல் முறையாக சவுதி அரேபியா கலந்து கொள்கிறது. இதனை 27 வயதான  ரூமி அல்கஹ்தானி என்ற மாடல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சவுதி அரேபியா ஒரு பழமைவாத நாடு என்ற பிம்பத்தைக் குறைக்க பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவூதின் இதனை அறிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  


"மிஸ் யுனிவர்ஸ் 2024 போட்டியில் கலந்து கொள்வதில்  நான் பெருமைப்படுகிறேன். இந்த போட்டியில் சவுதி அரேபியாவின் அறிமுகம் இதுவாகும்" என ரூமி அல்கஹ்தானியின் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த  பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தை சேர்ந்த அல்கஹ்தானி, பல்வேறு அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டவர். ஆனால் அழகிப் போட்டி வரலாற்றில் முதல்முறையாக சவுதி அரேபியாவை மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்து கொள்ளச் செய்கிறார்.  

சவுதி அரேபியா, பாரம்பரியமான மிகக் கடுமையான மத மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வருகிறது. இறுக்கமான சட்டங்கள், கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ள போதும் மாறி வரும் காலமாற்றங்களுக்கு ஏற்ப  அவசியமான தளர்வுகளையும் அமல்படுத்தி வருகிறது.  சவுதி அரேபியாவை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக, இங்கு பெண்கள் வாகனம் ஓட்டவும், இருபாலினத்தோர் பங்கேற்கும் விழாக்களில் கலந்து கொள்வது எனப் பலப்பல மாற்றங்கள்.  

அல்கஹ்தானி
2030 ம் ஆண்டுக்குள் 150 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கொண்டிருப்பதை இலக்காகக் கொண்டுள்ளது சவுதி அரேபியா. பொருளாதாரத்திற்கான தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக எண்ணெய் மற்றும் அது தொடர்புடைய வணிகத்திலிருந்து விலகிச் செல்லத் தொடங்கியுள்ளது. விஷன் 2030 திட்டத்திற்காக  மில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்து ஒரு மெகா பொழுதுபோக்கு நகரமாக கட்டமைக்க  முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகள்,  ஆண்களுக்கான ஃபிஃபா 2034 உலகக் கோப்பை, உலகின் மிகப்பெரிய கால்பந்து அணிகள் சிலவற்றையும் ஏலத்தில் எடுத்துள்ளது சவுதி அரேபியா  தனது பிம்பத்தை மீள்கட்டமைப்பதில், கால்பந்து மெகா தொடக்கங்கள் உதவும் என நம்பப்படுகிறது.  அத்துடன்  முஸ்லீம் அல்லாத தூதரக அதிகாரிகளுக்கு மது விற்பனை செய்யவும் இங்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web