மெக்காவில் தவறான செயல் செய்ததாக சவூதி அரேபியாவில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

 
மெக்கா சவுதி அரேபியா

சவூதி அரேபியாவின் புனித நகரான மெக்காவில் அமைந்துள்ள புகழ்பெற்ற பள்ளிவாசல் வளாகத்தில், அதன் புனிதத்தன்மையை மீறித் தவறான செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு வங்கதேச நாட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவூதி நாட்டின் கடுமையான சட்ட விதிகளின்படி எடுக்கப்பட்ட இந்த  நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்கா

இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து வங்கதேச அரசுக்கு எத்தகைய முன்னறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எந்தவிதமான முன்கூட்டிய தகவலும் தெரிவிக்காமல் குடிமக்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட விவகாரத்தில் சவூதி அரசுக்கு வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. 

மெக்கா

இதனைத் தொடர்ந்து, தலைநகர் டாக்காவில் உள்ள சவூதி அரேபியத் தூதரை நேரில் அழைத்து வங்கதேச அரசு தரப்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான அதிகாரப்பூர்வ விளக்கமும் கோரப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் இந்தச் செயல் இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளங்களிலும் வங்கதேச மக்கள் தங்களது எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.