சவுதி அரேபியாவில் கோர விபத்து: குமரியைச் சேர்ந்த 2 தமிழர்கள் பலி!

 
உபி

 

சவுதி அரேபியாவில் இரு டிரக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ജുബൈലില്‍ ട്രക്കുകള്‍ കൂട്ടിയിടിച്ച് അപകടം; കന്യാകുമാരി സ്വദേശികളായ രണ്ട് പ്രവാസികള്‍ മരിച്ചു

சவுதியின் ஜுபைல் பகுதியில் உள்ள அபு ஹத்ரியா நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த சகாய ராஜ் செல்வ ஜெபமாலை (56), வாலன் பெரப் ராஜ் (27) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இருவரும் சென்ற டிரக் மீது எதிரே வந்த மற்றொரு டிரக் மோதியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த டிரக்கை ஓட்டி வந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார்.

ജുബൈലില്‍ ട്രക്കുകള്‍ കൂട്ടിയിടിച്ച് അപകടം; കന്യാകുമാരി സ്വദേശികളായ രണ്ട് പ്രവാസികള്‍ മരിച്ചു

விபத்து குறித்து தகவல் அறிந்த சவுதி போலீசார், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு நாரியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களது உடல்களை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.வெளிநாட்டில் பணியாற்றச் சென்ற குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.