சவூதி அரேபியா மீது ஹூதி அமைப்பு தாக்குதல்... 11 பொதுமக்கள் படுகாயம் !

 
துப்பாக்கி

சவூதி அரேபியா மீது ஏமனின் ஹூதி அமைப்பு நேற்று (ஆகஸ்ட் 6) நடத்திய திடீர் தாக்குதலில் பொதுமக்களில் 11 பேர் காயமடைந்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். ஹூதியுடன் ஈரானின் ஆதரவுடன் இயங்கும் மற்ற ஈராக்கிய அமைப்புகளும் இணைந்து ஒன்றாகத் திட்டமிட்டுத் தங்கள்மீது பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தவிருப்பது கிட்டத்தட்ட உறுதி என்றும் அவர் எச்சரித்துள்ளார். வளைகுடா நாடுகளில் நிலவி வரும் இந்தத் திடீர் பாதுகாப்பு அச்சுறுத்தல் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு ஏமனின் முன்னாள் அதிபர் அப்த்ரப்பூ மன்சூர் ஹாதி அரசை அதிகாரத்தில் இருந்து அகற்றியதுடன் அந்நாட்டின் தலைநகரான சனாவை ஹவுதி கிளர்ச்சிக் குழு கைப்பற்றியது. அன்றிலிருந்து சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசுக்கும் ஈரான் ஆதரவு ஹவுதி படைக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் தொடர்ந்து நிலவி வருவது குறிப்பிடத்தக்கது  .

Houthi attack on Saudi Arabia wounds 11 civilians as kingdom warns of wider threat | The Times of Israel

எனினும் 2022-ஆம் ஆண்டு இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் மூலம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு பெரிய அளவிலான மோதல்கள் இல்லாமல் அமைதி நிலவி வந்தது.இந்தச் சூழலில் ஹவுதி கிளர்ச்சிப் படையினர் தற்போது நடத்தியுள்ள இந்தத் தாக்குதல் ஏமனில் மீண்டும் உள்நாட்டுப் போரின் பதற்றத்தைத் தீவிரமடையச் செய்துள்ளது. நீண்ட காலமாக அமைதிப் பாதையில் சென்று கொண்டிருந்த பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் வன்முறை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.