சவுதி விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியர் உட்பட 2 பேர் பலி

 
சவுதி

 

சவுதி அரேபியாவின் தம்மாம் விமான நிலையம் மீது நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில், இந்தியர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 இந்தியர்கள் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

சவுதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், உயிரிழந்தவர்களில் ஒருவர் சவுதி நாட்டைச் சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் இந்தியர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

One Indian National Killed, 2 Injured In Drone Attack On Saudi Arabia's Dammam Airport | World News - News18

இந்திய தூதரகம் உதவி

ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம், உயிரிழந்த இந்தியரின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதியின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களைக் குறிவைத்து தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த மாதத்தில் சவுதி விமான நிலையங்கள் மீதான தாக்குதல்களில் 22 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.