சவுதியில் தூக்கிலிடப்பட்ட நஸ்ருல் திருமணமானவர் அல்ல: குடும்பத்தினர் மறுப்பு

 
சவூதி

 

 சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த நஸ்ருல் இஸ்லாமும், ஸ்வீட்டி அக்தரும் புதுமணத் தம்பதிகள் என்ற தகவலை நஸ்ருலின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

22 வயதான நஸ்ருல் திருமணமாகாதவர் என்றும், ஸ்வீட்டி அக்தரைத் தங்களுக்குத் தெரியாது என்றும் அவரது தாயார் ரஹிமா பேகம் தெரிவித்துள்ளார். இருவரும் தேனிலவுக்காக சவுதி சென்று மரண தண்டனை பெற்றதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களையும் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

Not newly-weds', family denies Saudi-executed Nazrul was newly married to Sweety | The Business Standard

மெக்காவில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, நஸ்ருல் மற்றும் ஸ்வீட்டி இருவருக்கும் அக்டோபர் 14-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்த வழக்கின் விவரங்களையும் நீதிமன்றத் தீர்ப்புகளின் நகல்களையும் கோரி வங்கதேசத் தூதரக அதிகாரிகள் சவுதி அரசிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.