ரூ.10,372 கோடி 'IndiaAI Mission'-க்கு புதிய சி.இ.ஓ-வாக சௌரப் விஜய் பொறுப்பேற்பு!

 
IndiaAI Mission CEO சௌரப்  IndiaAI Mission CEO சௌரப்

இந்தியாவின் மிக முக்கியத் திட்டமான 'இந்தியா ஏ.ஐ மிஷன்'  புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சௌரப் விஜய் ஐ.ஏ.எஸ் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகச் சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்த சௌரப் விஜய், மத்திய அரசின் மிக உயரிய ஏ.ஐ திட்டத்தை வழிநடத்த மாற்றப்பட்டுள்ளார். இவருடன் இணைந்து, இந்தத் திட்டத்தின் புதிய தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக சுதீப் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இரு பெரும் ஆளுமைகளின் புதிய தலைமைத்துவம், இந்தியாவின் தொழில்நுட்பப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.மத்திய அரசால் இந்தியாவை உலகளாவிய ஏ.ஐ மையமாக மாற்றும் நோக்கில், சுமார் 10,372 கோடி ரூபாய் பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'IndiaAI Mission' செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஏஐ

இந்தத் திட்டத்தின் கீழ் அதிநவீன சூப்பர் கம்ப்யூட்டிங் மற்றும் கிராபிக்ஸ் பிராசஸிங் யூனிட் வசதிகளை உருவாக்குதல், இந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரத்திற்கு ஏற்ப, இந்தியாவின் சொந்த ஏ.ஐ மாதிரிகளை வடிவமைத்தல், இளம் தலைமுறையினருக்கு ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்குதல், ஏ.ஐ துறையில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல் போன்ற முக்கிய இலக்குகள் துரிதப்படுத்தப்பட உள்ளன.

ஏஐ மைக்ரோசாப்ட்

ஏற்கனவே டிஜிட்டல் அடையாளப் பிரிவில் வலுவான நிர்வாக அனுபவம் கொண்ட சௌரப் விஜய், தற்போது இந்த மெகா ஏ.ஐ திட்டத்தைக் கையில் எடுத்துள்ளதால், இந்தியாவின் உள்நாட்டுச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஸ்டார்ட்-அப்களுக்கான ஆதரவு இனி வரும் காலங்களில் அசுர வேகம் எடுக்கும் எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.