எஸ்பிஐ வங்கியில் ரூ.2.81 கோடி கடன் பெற்று மோசடி... தொழிலதிபர் தப்பியோட்டம்!
குஜராத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் தொழிலைத் தொடங்குவதற்காகப் பெறப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இயந்திரங்களை விற்றுவிட்டுத் தலைமறைவான தொழிலதிபர் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
குஜராத்தில் எஸ்பிஐ வங்கியில் தொழில் தொடங்குவதற்காகத் தொழிலதிபர் ஒருவர் முறையாகக் கடன் பெற்றுள்ளார். அதற்காகத் தனது நிறுவனத்தின் இயந்திரங்களை வங்கியில் அடமானமாகவும் வைத்துள்ளார். வங்கி அனுமதி இன்றி அடமானமாக வைக்கப்பட்டிருந்த இயந்திரங்களை அந்தத் தொழிலதிபர் ரகசியமாக விற்றுவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.
இந்தத் திடீர் மோசடியால் வங்கிக்கு மொத்தம் 2.81 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்த சொத்துகள் ஏலம் விடப்பட்ட போதிலும், அதில் வெறும் 62.9 லட்சம் ரூபாய் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகக் குஜராத் மாநில சிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தித் தப்பியோடிய தொழிலதிபரைத் தேடி வருகின்றனர்.
