உஷார்!! தங்க நகை செய்து தருவதாக ரூ3.50 கோடி மோசடி!!

 
மோசடி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நகை மாளிகை மற்றும் தங்க நகை தயாரிப்பாளர்  முருகபாண்டி. இவர் மதுரை   தங்க நகை மொத்த வியாபாரியான வீர மணிகண்டனிடம்  2020ம் ஆண்டு முதல் சில்லறை விற்பனைக்காக ரூ16 .73லட்சம்   மதிப்பிலான தங்க நகைகளை பெற்றுள்ளார். அதே போல்   ஆண்டிபட்டி அரசுப் பள்ளி ஆசிரியரான பிரபுவிடம்  25சவரன் தங்க நகைகள் புதிதாக செய்து தருவதாக கூறி ரூ18.74 லட்சம்  பணம் பெற்றுள்ளார். ஆனால் பெற்ற பணத்திற்கு புதிய தங்க நகைகளைச் செய்து தரவில்லை. இந்நிலையில்  முருகபாண்டி கடந்த மே மாதம் தலைமறைவானார். 

மோசடி
இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வீரமணிகண்டன் மற்றும் பிரபு இருவரும் சேர்ந்து   காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இச்சம்பவம் குறித்து  குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முருகபாண்டி வீர மணிகண்டன், பிரபுவை போல், மொத்த வியாபாரிகளான ஐயப்பன், அசோக்குமார், சுரேஷ்குமார், கார்த்திக், கனகராஜ் என பலரிடம்  முருகபாண்டி தங்க நகை மொத்த விற்பனையில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் என பலரிடம் ரூ3.41 கோடி  வரை  மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டார்.  

தங்கம்

தலைமறைவாக இருந்த அவரை   ஜூன் 18ம் தேதி கைது செய்த தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், வாடிக்கையாளர்களிடம் புதிய தங்க நகைகளுக்கான ஆர்டர்களை பெறுவது, அதற்கான பணத்தை முருகபாண்டியிடம் வழங்கியது என அத்தனை மோசடிக்கும் உடந்தையாக அவரது மனைவி மற்றும் மகன் இருவரும் செயல்பட்டனர்.  இதையடுத்து சென்னையில் தலைமறைவாக இருந்த முருகபாண்டியின் மனைவி சாந்தி ,   மகன் வீர விக்னேஷ்  இருவரும் கைது செய்யப்பட்டனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web