ஸ்கேட்டிங் விளையாடிய சிறுமி கார் சக்கரத்தில் சிக்கி படுகாயம்... பகீர் சிசிடிவி காட்சிகள்!
பிம்ப்ரி-சிஞ்ச்வாட் செக்டார் 12 பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் வெள்ளிக்கிழமை இரவு சிறுமி ஒருவர் காரின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். ஐந்து முதல் ஆறு வயது மதிக்கத்தக்க அந்தச் சிறுமி தனது பொம்மை மிதிவண்டியை ஓட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கார் சென்ற பாதையில் வந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் உரிய சிகிச்சைகளுக்குப் பிறகு வெற்றிகரமாக வீடு திரும்பியுள்ளார்.
🚨 Shocking #Pune VIDEO: A little girl was crushed under a car while riding a toy cycle inside a #PimpriChinchwad housing society. CCTV shows the car turning towards her before a rear wheel runs over her. She survived and was discharged from hospital. Police are probing. pic.twitter.com/gvKnROCsnS
— Varad Bhatkhande | Journalist (@VaradBhatkhande) August 9, 2026
இரவு சுமார் பத்து மணியளவில் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படும் நிலையில் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் காட்சிகள் பதிவாகியுள்ளன. கார் ஒன்று திடீரென திரும்பும்போது சிறுமி அதன் பாதையில் வருவதும் அடுத்த சில நொடிகளில் காரின் சக்கரத்தின் கீழ் சிக்குவதும் அதில் பதிவாகியுள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக ஓடிவந்து சிறுமியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கார் ஓட்டுநரின் பார்வைக்குச் சிறுமி தெளிவாகத் தெரியாத பகுதியில் இருந்ததே இந்த விபட்டுக்கு முக்கியக் காரணமாக இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனம் திரும்பும்போது உருவாகும் அந்த மறைவான பகுதியில் சிறுமி இருந்ததால் ஓட்டுநரால் அவரை கவனிக்க முடியாமல் போயுள்ளது. பெற்றோர்கள் புகார் அளிக்காததால் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றாலும் போலீசார் கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
