மாணவர்களே உஷார்.. உதவித் தொகை எனக்கூறி வரும் அழைப்புக்களை ஏற்காதீங்க... பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

இந்த மோசடி கும்பல் மாணவி பெயர், பெற்றோரின் பெயர், அவர்கள் படிக்கக் கூடிய வகுப்பு இவைகளின் தரவுகளை தெளிவாக அறிந்து கொண்டு அந்த எண்ணுக்கு கால் செய்து மாணவிக்கு ஸ்காலர்ஷிப் வந்திருக்கிறது, அந்த பணத்தை உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்புவதற்காக பெற்றோருடைய வங்கி கணக்கு விவரங்கள் தேவை என கேட்கின்றனர். ஒரு சில பெற்றோர்கள் சுதாரித்துக் கொண்டு மோசடி கும்பல் கேட்கும் அக்கௌன்ட் நம்பர் மற்றும் otp யை தெரிவிக்காமல் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
குறிப்பாக தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் வங்கியிலிருந்து நேரடியாக கல்வி உதவித்தொகை வருவதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்களுடைய விவரம் மற்றும் பெற்றோர்களுடைய பெயர் மற்றும் மொபைல் எண்கள் எப்படி மோசடி கும்பலுக்கு தெரிந்தது என பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இந்த மோசடி கும்பலை கண்டுபிடித்து உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!