பாறைக்குழி தண்ணீரில் மூழ்கிய பள்ளி மாணவன் ...!
கோவை மாவட்டத்தில் அவிநாசி காளம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழி தண்ணீரில் வழுக்கி விழுந்த மாணவன் 2 நாட்களுக்குப்பின் சடலமாக மீட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் பொங்குபாளையம் ஊராட்சியில் உள்ள காளம்பாளையம் பகுதியில் சுமார் 100 அடி தண்ணீர் நிறைந்துள்ள மிகப்பெரிய தனியார் பாறைக்குழி உள்ளது.
நவம்பர் 23ம் தேதி சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பள்ளி சிறுவர்கள் 9 பேர் பாறைக்குழியில் நிறைந்துள்ள தண்ணீரில் குளிப்பதற்காக சென்றனர். இதில், ஒரு சிறுவன் சட்டை, பேண்ட், செருப்பு இவைகளை கழற்றி வைத்துவிட்டு தண்ணீரில் இறங்கியபோது கால் தவறி வழுக்கி தண்ணீருக்குள் மூழ்கினார்.
அங்கு துணிகளை துவைத்துக்கொண்டிருந்த ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், அவிநாசி தீயணைப்பு துறையினர், பெருமாநல்லூர் போலீசார் விரைந்து சென்று தண்ணீரில் விழுந்த சிறுவனை தீவிரமாக தேடினர். பாறைக்குழி தண்ணீரின் கரையோரம் சிறுவனின் பேன்ட், சர்ட், காலணியும் கிடந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் காலை 10 முதல் மாலை 6 மணி வரை பாறை குழி தண்ணீரில் விழுந்த சிறுவனை தேடினர். நேற்று முன்தினம் இரவு நேரமானதால், போதிய அளவு வெளிச்சமும் இல்லாததால், மீண்டும் நேற்று காலை 10 மணி முதல் மாணவனை தேடும் பணிகள் தொடங்கப்பட்டன.
பாறைகள், மரக்கட்டைகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டிருந்த பள்ளி மாணவனை சடலமாக மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மாணவன் திருப்பூர் காந்திநகர் பத்மாவதிபுரம் ஏவிபி லே-அவுட் பகுதியில் மளிகைக்கடை நடத்தி வரும் திருமலைசாமியின் மகன் அஜய் . இவர் பத்மாவதிபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் எனவும் தெரிய வந்தது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!