பள்ளிப் பேருந்து மோதி 4 வயது சிறுவன் பலி... நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சி!

 
பள்ளிப் பேருந்து

 

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் பள்ளிப் பேருந்து மோதியதில் நான்கு வயது சிறுவன் நவநீத் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்ததும் காவல் துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதோடு, தலைமறைவாக இருந்த பேருந்து ஓட்டுநரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிப் பேருந்து பாதுகாப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஓட்டுநர் மட்டுமின்றி நிர்வாகத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.