ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
விடுமுறை

கொடையில் சிறந்த கடையெழு வள்ளல்களில் ஒருவர் வல்வில் ஓரி.  இவர்  நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலையை ஆட்சி செய்ததாக வரலாறு  வில் வித்தையில் சிறந்த விளங்கிய ஓரி மன்னனின் வீரம், கொடைத்தன்மை குறித்து சங்ககால தமிழ் இலக்கியங்களான எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்களில் ஏராளமான பாடல்கள்  இடம்பெற்றுள்ளன.
ஈகையின் மறு உருவமுமான, கொல்லிமலையை ஆண்ட வல்வில்  ஓரி மன்னனின் புகழை பறைசாற்றும் வகையில்,  1975 முதல் தமிழக  அரசு சார்பில் வல்வில் ஓரி விழா 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டு  விழா ஆகஸ்டு   2 மற்றும் 3ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு வரும் 3-ம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   

வல்வில் ஓரி
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், சங்க காலத்தில் வாழ்ந்த கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னரின் வீரத்தினையும், கொடைத்தன்மையையும் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17, 18 தேதிகளில், கொல்லிமலையில் ஓரிவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் வரும் ஆக. 2, 3ம் தேதிகளில் கொல்லிமலையில் ஓரி திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு கொல்லிமலையில் அரசின் பல்துறை விளக்க கண்காட்சி, சுற்றுலா விழா, மலர்க்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

உள்ளூர் விடுமுறை

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் குடும்பத்துடன் கொல்லிமலைக்கு வந்து கலந்துகொள்ள வசதியாக  ஆக. 3ம் தேதி வியாழக்கிழமை நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.இதையொட்டி அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி  கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் இயங்காது. உள்ளூர் விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில்  ஆகஸ்ட் 12ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில்  ஆகஸ்ட் 3ம் தேதியன்று கருவூலங்கள், துணைக்கருவூலங்கள் ஆகியவை குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும், அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது” என தெரிவித்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web