ஆகஸ்ட் 9ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
விடுமுறை

தமிழகத்தில் அரசு விடுமுறை பொதுவிடுமுறை தவிர உள்ளூர் பண்டிகை , விழாக்களுக்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதுண்டு. இந்த விடுமுறையை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிடுவார்கள். அந்த வகையில் ஆகஸ்ட் 9ம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. எட்டு பட்டியை கட்டு ஆளும் அன்னை முதன்மை பெற்ற கோட்டையில் எழுந்தருளி பெரிய மாரியம்மன் என்னும் திருநாமத்தில் பொது மக்களுக்கு அருளாட்சி புரிகிறார். இந்த கோவிலில் ஆடி மாதத்தில் ஆண்டு தோறும் விமரிசையாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.

சேலம்
 இந்த ஆண்டு கோட்டை மாரியம்மனுக்கு ஆடித்திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 17-ம் தேதி முன் பந்தக்கால் வைபவம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பூச்சாட்டுதல் நிகழ்ச்சி கடந்த 25-ம் தேதி வெகு விமர்சியாக நடைபெற்றது.
தொடர்ந்து அடுத்த மாதம் 7-ம் தேதி சக்தி அழைப்பு நிழ்ச்சியும், 9,10 மற்றும் 11-ம் தேதிகளில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு பிரார்த்தனை செலுத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 15-ம் தேதி பால்குட ஊர்வலம், மகா அபிஷேகம், தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதானை நடக்கிறது.

இந்த நிலையில், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சேலம், அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு (09.08.2023) புதன்கிழமை அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறை
இந்த உள்ளூர் விடுமுறை, செலாவணி முறிச் சட்டம் 1881(Negotiable Instrument Act 1881)-ன் கீழ் வராது என்பதால், அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் சேலம் மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகின்ற (02.09.2023) சனிக்கிழமை அன்று ஈடுகட்டும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

 
From around the web