3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
மழை

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக  வடமாநிலங்களில்  கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்லி, உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா , தெலுங்கானா   மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்துள்ளது. இதனால்  மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.  இந்த மழை மேலும் தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விடுமுறை

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேரளாவின் கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும்   ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, திரிச்சூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறை School Holiday

இதனை முன்னிட்டு கண்ணூர், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு   இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  கண்ணூர் பல்கலை கழகத்தில் பி.எஸ்.சி. தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!