இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
விடுமுறை

நாளை ஜூலை 22ம்தேதி உலகம் முழுவதும் ஆடிப்பூரம் கொண்டாடப்பட உள்ளது. அம்பிகை ஆலயங்கள் மற்றும் விஷ்ணு ஆலயங்களில்  ஆண்டாள் பிறந்த நட்சத்திரமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்படும். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில்  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில்  ஆடிப்பூர திருவிழா கொண்டாடப்பட  உள்ளது.  இந்த திருவிழாவில் கலந்து கொள்ள தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த  திருவிழாவிற்கான  ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை ஜூலை 21ம் தேதி  உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.  இந்த உத்தரவை  மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் பிறப்பித்துள்ளார். இதுகுறித்து   செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உள்ளூர் விடுமுறை

அதில் ”செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நாளை ஜூலை 21ம் தேதி வெள்ளிக்கிழமை ஆடிப்பூர திருவிழா கொண்டாடப்படுகிறது.   இன்று   செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 5ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web