பள்ளி கல்வி தரவரிசை... தமிழ்நாடு 7-வது இடம் - முதலிடத்தைப் பிடித்த சண்டிகர்!
Aug 28, 2026, 16:20 IST
இந்தியாவின் 2025-26 ஆம் ஆண்டுக்கான பள்ளி கல்வி வளர்ச்சி குறியீட்டுத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேசிய அளவில் சண்டிகர் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

சண்டிகர் யூனியன் பிரதேசம் முதலிடத்தையும், கேரளா இரண்டாவது இடத்தையும், புதுச்சேரி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. கோவா நான்காவது இடத்திலும், டெல்லி ஐந்தாவது இடத்திலும், பஞ்சாப் ஆறாவது இடத்திலும் உள்ளன. கல்வித்துறையில் பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளைச் செய்து வரும் தமிழ்நாடு இப்பட்டியலில் 7-வது இடத்தைப் பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து அந்தமான் (8-வது இடம்), லட்சத்தீவு (9-வது இடம்) மற்றும் ஹரியானா (10-வது இடம்) ஆகியவை முதல் பத்து இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.
