சாத்தூர் அருகே கனமழையால் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி உயிரிழப்பு; தாய் படுகாயம்!
Updated: Oct 23, 2026, 08:19 IST
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெய்த கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில், பள்ளி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை கிராமத்தில் இரவு நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக, அங்குள்ள குடியிருப்பு வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த எதிர்பாராத விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி முத்துச்செல்வி என்ற பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், இடிபாடுகளில் சிக்கிப் படுகாயமடைந்த முத்துச்செல்வியின் தாயார் மீட்கப்பட்டு, உடனடியாகச் சாத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கனமழை காரணமாக நிகழ்ந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
