பகீர் வீடியோ... பர்த்டே கேக் சாப்பிட்ட பள்ளி மாணவி பலி... பிறந்த நாளில் சோகம்!

 
மான்வி

 நமது பாரம்பரிய உணவு வகைகளில் உணவே மருந்தாக தான் முன்னோர்கள் வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போதைய வாழ்க்கை முறை, எதிலும் அலட்சியப் போக்கு ஆகியவை பல நேரங்களில் உணவே விஷமாகி வருகிறது. பல பகுதிகளில் தொடர்கதையாகி வரும் நிலையில் சில இடங்களில் உயிருக்கே உலை வைக்கும் அளவுக்கு ஆபத்திலும் முடிந்து விடுகிறது. பஞ்சாபின் பாட்டியாலாவில் 10 வயது சிறுமி தனது பிறந்தநாளுக்காக ஆன்லைனில் கேக் ஒன்றை ஆர்டர் செய்தார். அவள் கேக்கை சாப்பிட்ட பிறகு உயிரிழந்தார்.


 

 

 

 இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த கேக்கை சப்ளை செய்த பேக்கரியில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. சிறுமி இறந்து 5 நாட்கள் ஆகியும் பாட்டியாலா இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்கிறார்  சிறுமியின் தாயார். 5ம் வகுப்பு படித்து வரும் மான்வி  ஆம் வகுப்பு மாணவியான மான்வி மார்ச் 24 ம் தேதி பிறந்தநாளுக்காக ஆன்லைன் மூலம் அவரது குடும்பத்தினர் கேக்கை ஆர்டர் செய்தனர்  
 இரவு 7 மணியளவில் கேக்கை வெட்டி சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர்.   மான்வியின் பிறந்தநாளை குடும்பத்தினர் கொண்டாடும் வீடியோ அவரது மரணத்திற்குப் பிறகு தான் வெளியானது சோகம்.  தூங்கச் சென்ற மான்வி அதிகாலையில் தண்ணீர் கேட்டுவிட்டு மீண்டும் தூங்கச் சென்றதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். காலையில் வெகுநேரமாகியும் எழுந்திருக்காததால் அவளை எழுப்பிய போது சுயநினைவின்றி கிடந்துள்ளாள். உடனடியாக அலறித் துடித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மான்வி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  

 

மான்வி
மான்வியுடன் கேக்கை சாப்பிட்ட குடும்பத்தில் உள்ள மற்ற 5 பேருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அவரது மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய சுகாதாரத் துறை கேக்கை எடுத்துச் சென்றதாகவும்,ஆனால் இதுவரை தக்க பதில் கூறவில்லை எனக் கூறப்படுகிறது.   

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web