தனியார் பேருந்து மோதி பள்ளி மாணவி பலி!! அண்ணன் கண்முன்னே சோகம்!!

 
ஜெகஜோதி

திருச்சி மேல சிந்தாமணி காவேரி நகர் பகுதியில் வசித்து வருபவர்  அழகப்பன். இவரது மகன் விஜயகுமார் மற்றும் மகள் ஜெகஜோதி. இதில் ஜெகஜோதி மேலபுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று விஜயகுமார் மற்றும் ஜெகஜோதி இருவரும் பள்ளிக்கு பைக்கில்  சென்று கொண்டிருந்தனர். அப்போது சத்திரம் பேருந்து நிலையம் அருகில் வந்தபோது, தனியார் பேருந்து  அதிவேகமாக வந்து மோதியது. இதில் பள்ளி மாணவி ஜெகஜோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அண்ணன் சிவக்குமார் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து
இந்நிலையில், விபத்தில் மாணவி உயிரிழந்தது குறித்து   உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.  இந்தக் கோர விபத்தைக் கண்டித்து இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்  , சி.ஐ.டி.யு சங்க மாவட்ட செயலாளர்  , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர்  உட்பட சுமார் 100க்கும் மேற்பட்டோர் முற்றுகை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெற்றோர், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் சிஐடியு சங்கத்தினர்,   திருச்சி கோட்டாட்சியர்,  மாநகர காவல் துறை துணை ஆணையர் அன்பு, மாநகராட்சி ஸ்ரீரங்கம் மண்டல உதவியாளர், ஸ்ரீரங்கம் காவல்துறை உதவியாளர் உட்பட   பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

பேச்சுவார்த்தையில் முதற்கட்டமாக, 15நாட்களுக்குள் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து சாலை சீரமைத்து தரப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  அத்துடன் உயிரிழந்த பள்ளி மாணவி குடும்பத்திற்கு ரூ4லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.  குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் பேருந்து நிறுத்தத்தை அகற்ற வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்த   கோரிக்கைகளை தவிர மற்ற கோரிக்கைகள் அனைத்தும் பின்னர் பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web