ஏப்ரல் 8ல் சூரிய கிரகணம்... பள்ளிகளுக்கு விடுமுறை!

 
சூரிய கிரகணம்

 பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படும். வானில் நாள்தோறும் அதிசயங்களுக்கு பஞ்சமில்லை. அந்த வகையில் ஏப்ரல் 8 ம் தேதி சூரிய கிரகணம் வட அமெரிக்கா முழுவதும் தெரியும் இந்த நிகழ்வு சுமார் 1000 கிலோ மீட்டர் வரை தெரியலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
வட அமெரிக்காவில் சூரிய கிரகணம் நிகழ உள்ளதால் நயாகராவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 1979-க்கு பிறகு நயாகராவில் சூரிய கிரகணம் தென்பட உள்ளது. இதனால் லட்சக்கணக்காக மக்கள் அங்கு குவியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

சூரிய கிரகணம்


நயாகரா, கனடாவில்  8 ம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ள நிலையில், அது நயாகரா நீர்வீழ்ச்சியில் பிரதிபளிக்கும். இந்த நிகழ்வை காண ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடலாம். இதற்காக  அவசர நிலை அறிவித்துள்ளதாக நயாகரா பிராந்தியத் தலைவர் ஜிம் பிராட்லி தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நாளில்  மில்லியன் கணக்கான மக்கள் நயாகரா நீர்வீழ்ச்சியில் கூடுவார்கள் என  மதிப்பிட்டுள்ளனர். அவசரகால தேவைகளுக்காக  மொபைல் போன், நெட்வொர்க், போக்குவரத்து நெரிசல்  பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் மாற்று ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. 

சூரிய புயல்
சூரிய கிரகணத்திற்கு முன்  பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை இருப்பு வைத்துக்கொள்ளுமாரும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை விதிகளை பின்பற்றவும், சூரிய கிரணத்தை சாலையில் நின்று புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  
மேலும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு நயாகராவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை நேரடியாக பார்ப்பதை தவிர்த்து ISO 12312-2 சான்றளிக்கப்பட்ட கண்ணாடிகளைப் பயன்படுத்தி அதனை பார்க்குமாறும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web