இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

 
விடுமுறை


 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மேகவெடிப்பு காரணமாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். 

மழை


இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் ”ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றுமுதல் மிக கனமழை பெய்து வருகின்றது. கடந்த 24 மணிநேரத்தில் ராமேசுவரத்தில் மட்டும் 440 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

ரெட்

மேலும், இன்றும் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், சூழலுக்கு ஏற்ப இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web