உஷார்... பள்ளி மாணவன் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி கவலைக்கிடம்... மொபைல் பேசிய போது சோகம்!

 
உயர் அழுத்த மின்சாரம்
 

சென்னையில் ஆவடி  திருமுல்லைவாயலில் வசித்து வரும் சிறுவன்  17 வயது சந்தோஷ். இவர் சமீபத்தில் தான் 12ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இவர் மார்ச் 29ம் தேதி, தன் வீட்டு மொட்டை மாடியில் நின்று மொபைலில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.
 உயர் அழுத்த மின்சாரம்
அப்போது, எதிர்பாராத விதமாக வீட்டுக்கு அருகில் செல்லும் உயர் அழுத்த மின்கம்பியில் இருந்து அவர் மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது. இதனால் சந்தோஷ் அலறி கூச்சலிட்டான்.  சந்தோஷின் அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சந்தோஷ் 90% தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திருமுல்லைவாயல் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். உயர் அழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி இளைஞர் பலியான சம்பவம் திருமுல்லைவாயில் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

மொபைல்

இச்சம்பவம் உயர் அழுத்த மின்கம்பிகளால் ஏற்படும் ஆபத்து குறித்த அச்சத்தை உருவாக்கி விட்டுள்ளது. உயர் அழுத்த  மின்கம்பிகளுக்குக் கீழ் நின்றுகொண்டு மொபைலில் பேசினால் மின்சாரம் பாய்ந்து விடும் ஆபத்து குறித்த கேள்வியும் பொது மக்களிடையே எழுகிறது.
இது குறித்து விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பில்  அண்ணாமலை பல்கலைக்கழக மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை பேராசிரியர் , "மொபைல் மின்காந்த கதிர்வீச்சுக்கும் உயர் அழுத்த மின்கம்பிகளில் செல்லும் மின்சாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உயர் அழுத்த மின்கம்பிகளுக்குக் கீழ் நின்று பயன்படுத்தினால், எந்த பாதிப்பும் ஏற்படாது. அதே நேரத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது, அதன் மின்கடத்தாத் தன்மை குறைந்துவிடும். அப்போது உயர் அழுத்த மின்கம்பிக்குக் கீழ் நின்றால், அந்த நபரே மின்கடத்தியாக மாறி, அவரது உடலில் மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது”  எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web