தாய் படிக்க சொன்னதால் ஆத்திரம்... மாலின் 4வது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவர் தற்கொலை!

பஞ்சாப் மாநிலத்தில் மொஹாலியில் உள்ள ஷாப்பிங் மாலில் மாணவர் ஒருவர் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். உயிரிழந்த மாணவர் 17 வயது அபிஜித் என அடையாளம் காணப்பட்டார். தனது தந்தையுடன் ஏற்பட்ட சிறிய வாக்குவாதத்துக்கு பிறகு இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
காவல்துறையினரின் அறிக்கைப்படி, காவல்துறைக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் மாலின் 4வது மாடியில் இருந்து ஒருவர் குறித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து காவல்துறையின் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அபிஜித்தின் தந்தை மன்மோகன் சிங் தனது மகன் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தனது மகனை படிப்பில் கவனம் செலுத்தவும், செல்போன் பார்க்கும் நேரத்தை குறைக்கவும் தான் கூறினேன். அபிஜித் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் குடும்பத்தினர் அவரைத் தேடத் தொடங்கினர். இந்நிலையில் உங்கள் மகன் உயிரிழந்துவிட்டார். என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது எனத் தெரிவித்தார்