கனமழை எதிரொலி: கேரளவில் 12 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

 
மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

கேரள மாநிலத்தில் தொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புறம், பாலக்காடு, திருச்சூர், இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் ஆலப்புழா ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடிகள், மெட்ரிகுலேஷன் / சிபிஎஸ்இ பள்ளிகள், தொழிற்கல்வி கல்லூரிகள், ஸ்பெஷல் கிளாஸ்கள் மற்றும் டியூஷன் மையங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும்.

விடுமுறை பள்ளி இன்று மழை கனமழை

முன்னதாகத் திட்டமிடப்பட்ட பல்கலைக்கழகத் தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் திட்டமிட்டபடி மாற்றமின்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கொட்டித் தீர்க்கும் மழையால் பம்பை உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழை தொடர்பான சம்பவங்களால் மாநிலத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து உள்ளதால், மலைப்பகுதிகளுக்குத் தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும், மாநில பேரிடர் மேலாண்மை முகமையின் எச்சரிக்கைகளைத் தவறாமல் பின்பற்றுமாறும் மாவட்ட ஆட்சியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.